UPDATE


ஒன்றிணைந்து போராட்டத்தை வலுப்படுத்துவோம்! ஆதரிப்போம்!

#இதயத்தில்_அணிவோம்

அரச வங்கிகளின் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் தொடரும் தாமதத்திற்கு எதிராக சங்கம் இதுவரையில் அமுல்படுத்திய அடிப்படை தொழிற்சங்க நடவடிக்கைகளினுள்ளே கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திடத் தவறியமை தொடர்பில் அதிகாரிகளுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய,

அனைத்து அரச வங்கி ஊழியர்களும் எதிர்ப்பு சின்னங்களை அணிந்து 2021.10.25 (நாளை) மற்றும் 26, 27 திகதிகளில் பணியாற்றுவார்கள்.

போராட்ட குணமிக்க சகோதர சகோதரிகளே,

சங்கம் இதுவரை முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கைகளின் வெற்றியில் பக்கபலமாய் விளங்கிய மற்றும் பல்வேறு வழிகளிலும் போராட்டத்திற்கு பங்களித்த அனைத்து ஊழியர்களுக்கும் சங்கம் மரியாதைகளைத் தெரிவித்துக் கொள்கின்றது!

பொறுப்புள்ள அதிகாரிகளே!

நாடு, பொருளாதாரம் மற்றும் மக்களின் நெருக்கடியை தொடராமல் உடனடியாக கூட்டு ஒப்பந்தங்களின் பிரச்சனைக்குரிய தீர்வுகளை வழங்குங்கள் ..!

இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வெல்க !

எங்கள் போராட்டத்திற்கு வெற்றி உண்டாகட்டும்!


@ Ceylon Bank Employees Union.

Solution by TekGeeks